தளபதி விஜய் காரை உடைத்த ரசிகர்கள்! Tamil Xpress

தளபதி விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிக்காக கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு தளபதி விஜய் காரில் சென்றுள்ளார்.


தளபதி விஜய் கில்லி திரைப்படத்திற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு வருவதால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் கூடியிருந்தார்கள்.

விஜய் காரில் வந்த நேரத்தில் ரசிகர்கள் அனைவரும் ஒன்று கூடி செல்பி எடுக்க முயன்றதில் விஜயின் கார் தாறுமாறாக நொறுங்கியது.


அதற்கு விஜய் ஏதும் ரசிகர்களை திட்டவில்லை;கோபப்படவில்லை;கவனமாக பார்த்து செல்லுமாறும் வாகனங்களை முன்னே பார்த்து ஓட்டி வருமாறு அறிவுரை செய்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

தளபதி விஜய்க்காக கேரளாவில் குவிந்த கூட்டத்தை வீடியோவாக விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் நேற்று ட்விட்டரில்(X தளத்தில்) பதிவு செய்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்