இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமிப்புப் பொருகள் குறித்த மிழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. நாவீனத்துவத்தை விரும்பும் இளம்பெண்களும் அழகு மற்றும் ஆரோக் கியத்தை பொறுத்தவரை இயற்கையான பொருட்களையே தேர்ந்தெடுத்தார்கள்.
அந்தவகையில் பல தலைமுறைகளாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான அழகு பராமரிப்பு பொருட்களும், அவற்றை உபயோகிக்கும் முறைகளும் இதோ...
வேப்பிலை :
முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டுவரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூசவும்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.
இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும் பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.
தேன் :
தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும். நீப்புண்களில் தேனை தொடர்ச்சியாக பூசிவந்தால் காயம் விரைவாக ஆறுவதோடு, காயத்தால் ஏற்படும் வடுவும் மறையும். சிறிதளவு தேனோடு, காய்ச்சிய பாலேடு, சந்தனம், கடலைமாவு, ரோஜா எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். இந்த 'பேஸ் பேக்', முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.
நெல்லிக்காய்: முடி உதிர்வு பிரச்சினையால் சிரமப்படுபவர்களுக்கு நெல்லிக்காய்கும். 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.
காய்ந்த நெல்லிக்காய், புங்கங்கொட்டை, சீயக்காய் இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அடுப்பை அணைத்து அந்தக் கலவையை இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். அடுத்தநாள் காலையில் அந்த சாற்றை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கவும்.
மஞ்சள் :
ஸ்டிரெச் மார்க்குகள் இருப்பவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்தப் பகுதியில் பூசவும். இவ்வாறு நிளமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் மார்க்குகள் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.
சிறிதளவு மஞ்சள்தூளுடன் அரிசிமாவு, தக்காளிச்சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூசவும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுந்தப் படுத்தவும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு கிரமப்படுபவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்னொய் கலந்து பாதங்களில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் பாதங்களைக் கழுவவும்.
0 கருத்துகள்