வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக குடும்பத்தைவிட்டு பிரிந்து தனியாக விப்பவர் பக்குக்கு கடினமாக இருப்பது சமையல் வேலைதான், மற்றவர்களைப்போல சமையல் அறையில் தேவையில்லா உபகரணங்களையும் இவர்கள் வைத்திருக்க முடியாது.
மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிடு இவர்களுக்கு உணவில் போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதும் உண்டு இத்தகையவர்கள் எளிதில் உபயோகிக்கும் விதமாகவும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் பயன்படக்கூடிய சில சமையலறை சாதனங்களை இங்கே பார்ப்போம்....
இன்ஸ்டன்டு பரட்
காலை நேரத்தில் மற்ற வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டே சமைக்கும் போது குக்கரில் எத்தனை விசில் வந்தது என்பதை கவனிக்க மறப்பது பலருக்கும் அடிக்கடி நடக்கும். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக வந்திருப்பதே இன்டட்.
இந்த பிரஷர் குக்கரில் உணவுப்பொருட்களை மெதுவாகவும், வேகமாகவும் சமைப்பதற்கான வசதிகள் உள்ளன. இதில் எத்தனை விசில் வர வேண்டும் என்பதை 'செட்' செய்துவிட்டு நீங்கள் மற்ற வேலைகளில் ஈடுபடலாம்.
சழைகரும்போது உணவுப்பொருட்கள் வெளியில் சிந்தாமல் இருப்பதற்கான அமைப்பும் உள்ளது. இதில் சமைத்த உணவுகளை நீண்டநேரத்துக்கு சூடாகவே வைத்திருக்கக்கூடிய வசதியும் உள்ளது.
மினி மல்டி குக்கர்
மின்சாரத்தால் இயங்கும் இந்த குக்கர், சாதம் வைப்பதற்கு மட்டுமல்லாமல் கறி சமைக்கவும், காய்கறிகள், தானியங்கள் மற்றும் முட்டை வேக வைப்பதற்கும் உதயும். இதில் சமைக்கும்போது அருகில் இருந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை குக்கரில் அரிசியை வைத்துவிட்டு மற்ற வேலைகளை கவளிக்கலாம். சமையல் முடிந்தவுடன் குக்கர் தாளாகவே 'ஆப்' ஆகிவிடும்.
ஏர் பிரையர்
எண்ணெய் இல்லாமல் உணவுப்பொருட்களை பொரிப்பதற்கு இந்த ஏர் பிரையர் உதவும். இதற்கு உள்ளே வெப்பமான காற்று சுழன்றுகொண்டே இருக்கும். இதன்மூலம், எண்ாெய்யில் பொரிப்பதுபோலவே உணவுப்பொருட் களை பொரித்து எடுக்கமுடியும். கலோரிகள் அதிகரிப்பதைப் பற்றிய கவலை இன்றி உங்களுக்குப் பிடித்த வடை கட்லட், சிக்கள்பிரை ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் பொரித்து சாப்பிடலாம்.
மல்டி பர்பஸ் மீகி
தற்போது கடைகளில் கிடைக்கக்கூடிய இந்த மல்டி பர்பஸ் மிக்சி, சட்னி அரைப் பதற்கு மட்டுமல்லாமல் சப்பாத்திக்கு மாவு பிசையவும், காய்கறிகளை வெவ்வேறு வடிவங்கள், அளவுகளில் வெட்டவும், பழங்களில் சாறுபிழியவும் உபயோகப்படும். இதுதவிர மாவு அரைப்பது. வெங்காயம் நறுக்குவது போன்ற வேலைகளையும் இதில் எளிதாக செய்ய முடியும்.
காம்பேக்டு கெட்டில்:
இந்த காம்பேக்டு எவக்ட்ரிக் கெட்டில் தண்ணீர் கொதிக்க வைக்க மட்டும் பயன்படுவது இல்லை. இதைப் பயன்படுத்தி நூடுல்ஸ், பாஸ்தா, மக்ரோனி போன்ற உணவுவகைகளையும் சமைக்க முடியும். இதன் மூலம் சூப், தேநீர் போன்ற பானங்களையும் தயாரிக்கலாம். இந்த கெட்டிலை எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.
0 கருத்துகள்