ஏப்ரல் 19 2024 நடந்த ஜனநாயக நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடிமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்கள்.
வெளிநாடுகளில் இருந்தவர்கள் சொந்த ஊருக்கு கிளம்பி வந்து வாக்களித்தார்கள். மேலும் பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் வந்து அவர்களது வாக்குகளை பதிவு செய்தார்கள்.
நடிகர் விஜய் ஓட்டு போட வருவார் என்று அவரது ரசிகர்கள் காலில் இருந்து அவர் வீட்டின் முன் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தது போலவே தளபதி விஜய்யும் ஓட்டு போட காரில் வந்தார்.
2021 கொரோனா காலகட்டத்தில் நடந்த தமிழ்நாடு மாநில தேர்தலில் சைக்கிளில் ஓட்டு போட வந்த விஜய்யின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் காரில் வந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று புரிந்து கொண்டார்கள்.
அதன்படியே வாக்கு செலுத்தும் மையத்துக்கு வந்த விஜய் மிகவும் சோர்வுடன் தலையில் காயத்துடனும் கையில் காயத்துடனும் வந்திருந்தார்.
அவரை பார்க்கக் கூடிவிட்டார் ரசிகர்களின் கூட்டத்திலிருந்து முட்டி மோதி வாக்குமூலத்திற்குள் நுழைந்து தனது வாழ்க்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.
தளபதி விஜய் தற்போது 'GOAT' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ளதால் படப்பிடிப்பின் போது விஜய்க்கு ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
விஜய் தனது ஒவ்வொரு படத்திலும் தானே பாடி தானே நடனமாடி டுப் போடாமல் அதிரடி சண்டை காட்சிகள் செய்து அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் வெங்கட் பிரபு படத்தில் படப்பிடிக்கும் போது இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவை சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
0 கருத்துகள்