சமூகநீதி என்றால் என்ன? Tamil Xpress

  சமூகநீதி என்றால் என்ன?

  • சமூகமேலாதிக்க உணர்வினைப் பெற இன, மத, மொழி, சாதி மற்றும் பண்பாட்டுக் குழுவினர் மற்ற குழுவினின் சமூக உரிமைகளைப் பறித்தெடுக்க முயலும்போது அல்லது தடுக்கும்போது சமூகப் பகை முரண்கள் உருவாகின்றன.
  •  சமூக நீதி என்ற கருத்தானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கிறது. தங்கள் மீதான மேலாதிக்கத்தை மறுத்துத் தங்களுக்கு உரிய உரிமைகளைச் சமமாகப் பெற்றிட நடத்துகிற போராட்ட உணவினையே சமூக நீதி என்கிறோம். 

  • தளிநபர்களின் சமூக செயல்பாடுகளுக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்து. பாகுபாடற்ற நீதியையும் நியாயத்தையும் நிலை நிறுத்துவதாகும்.
  • தற்காலத்தில் உலகளாவிய பல சமூக அமைப்புகள் சமூகப் பெயர்ச்சிக்கான தடைகளை உடைத்து சமூகப் பாதுகாப்பை உண்டாக்கி, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கலைக்கிறது.

  உலகளவில் சமூக நீதி (Social Justice):

  • சமூக நீதி என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கிறது. பொதுவாக வேறுபாடுகளைப் பொருளாதாரப் பரவல், தனிப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சமூக செல்வாக்கின் மூலம் இதனைக் கணிக்கலாம். 
  • மேற்கத்திய நாடுகள் மற்றும் பழமையான ஆசிய நாடுகளில் சமூக நீதி என்ற கருத்தாக்கமானது தனிநபர்களின் சமூக செயல்பாடுகளுக்குத் தேவையானவற்றைப் பூரத்தி செய்து பாகுபாடற்ற நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்துவதாகும்.
  • தற்காலத்தில் உலகளாவிய பல சமூக அமைப்புகள் சமூகப் பெயர்ச்சிக்கான தடைகளை உடைத்து. சமூகப் பாதுகாப்பை உண்டாக்கி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கலைக்கிறது.
  • சமூக நீதி மூலம் ஒரு சமூகத்தில் உள்ள அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களின் உரிமையையும் கடமையையும் உறுதிசெய்து, சமூதாயத்தின் ஆதாயங்களையும் சுமைகளையும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
  • வரி, சமூகக் காப்பீடு, பொது உடல் நலவியல் பொதுக்கல்வி, பொதுப்பணி, தொழிலாளர் சட்டம்.சந்தை ஒழுங்காணையம் போன்ற நிறுவனங்களில் வளங்களையும், வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

  சமூக நீதி என்பது வெறும் சாதி அடிப்படையிலானது அல்ல. சமூகத்தின் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு உதவுவதே சமூக நீதி.

உலக சமூக நீதி நாள் :

  1. சமூக நீதிக்கான உலக நாள் அல்லது நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 20-ஆம் நாளன்று கடைபிடிக்கப்படுகிறது.
  2. 2009-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. 
  3. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புகள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.

இந்தியாவில் சமூக நீதி :

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பட்டியல் பழங்குடி அமைச்சகம் போன்ற அமைச்சகங்கள் பட்டியல் சாதியினர் (ம) பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் உட்படச் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு சமூக நீதியையும் நலத்திட்டங்களையும் செயல்படுத்துகிறது.

 சாதி, மொழி, மதம், பால்,வசிப்பிடம்,பொருளாதார சூழல், உடல் ஊனம் போன்ற முறையில் வேலைவாய்ப்பு மற்றும் கல்விவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கல்விக்கு உதவித்தொகை போன்ற பல திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன.

  தமிழகத்தில் சமூக நீதி:

பெரியார் சமூக நீதி : 

  1. பிறப்பால் ஜாதி, மதம், ஆண், பெண் பாகுபாடு ஆகியவற்றை தன் சமூக சிந்தனையால் எதிர்த்தவர் மற்றும் மனித நேயம் மற்றும் சுயமரியாதை கருத்தை வலியுறுத்தியவர்.
  2. பெரியார் தமிழக சமூக சீர்த்திருத்தவாதி, செயற்பாட்டாளர், சிந்தனையாளர் ஆவார். அவர் சமூக நீதி, சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இறை மறுப்பு, பகுத்தறிவு, பெண்கள் முன்னேற்றம். கல்வி ஆகியவை சார்ந்த சிந்தனைகளே பெரியார் கொள்கைகள் அல்லது பெரியார் சிந்தனைகள் என்றழைக்கப்படுகின்றன.
  3. இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யுனெஸ்கோ நிறுவனம் புத்துலக தொலை நோக்காளர்.
  4. தென் கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
  5. + இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்