திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சி பகுதியில் 6 வயது பெண் குழந்தை கடையில் விற்கும் பத்து ரூபாய் மாம்பழ ஜூஸ் வாங்கி குடித்துள்ளது.
ஜூஸ் குடிக்கும் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் மிகுந்த வேதனைக்கு உள்ளான சிறுமியின் பெற்றோர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்கள்.
அதன்படி விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீனி பிடித்தது பத்து ரூபாய் டெய்லி (Dailee) என்கிற நிறுவனத்தின் மாம்பழ ஜூஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
![]() |
காலாவதியான Dailee mango juice |
இந்த Dailee நிறுவனத்தின் ஒரு கிளை நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று அங்கிருந்த குளிர்பானத்தின் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி உள்ளார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குளிர்பான நிறுவனங்களை சோதனையிட உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் அறியாமல் குடிக்கும் உணவு பொருள்களில் இது போல காலாவதியான குளிர்பானங்கள் விற்பது தடை செய்ய வேண்டும்.
பொதுவாக குளிர்பானங்கள் அனைத்தும் இயற்கையான முறையில் பழங்களை பயன்படுத்தி செய்வது கிடையாது; நிறைய குளிர்பானங்கள் கலர் பவுடர்களையும் வாசனையை பவுடர்களையும் அதிகமாக கலந்து தான் இந்த குளிர்பானங்களை தயார் செய்கிறார்கள்.
இவையெல்லாம் மூன்று மாத கால அளவுக்கு காலாவதியாகிவிடும். இந்த காலாவதியான குளிர்பான பாட்டில்களை தூக்கி எறியாமல் கடைகளில் வைத்து விற்று பணமாக்கிவிடலாம் என்று கடைக்காரர்கள் செய்யும் அநியாயத்தால் பல பேர் பாதிப்படைகிறார்கள்.
இதில் வேதனை என்னவென்றால் காலாவதியான குளிர்பானங்கள் அனைத்தும் விற்பது பெட்டி கடையில் தான். பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் அதிகம் படிக்க தெரியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு காலாவதி என்பது தெரியாமல் இருக்கலாம்.
அவர்கள் அறியாமையால் நடக்கும் இந்த தவறுகளால் பல சின்னஞ்சிறு குழந்தைகளும் அந்த குளிர்பானங்களை வாங்கி குடிக்கும் பெரியோர்களும் பாதிப்படைகிறார்கள்.
குளிர்பானங்களை வாங்கி குடிக்கும் மக்களும் குளிர்பானங்களில் காலாவதி தேதிகளை சரிபார்த்து வாங்கி குடிக்க வேண்டும்.
0 கருத்துகள்