இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்துக்கு உரிமை கோரலாம் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு சென்ற வினேஷ் போகத் 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நீதிமன்றம் வினேஷ் போகத்துக்கும் இந்திய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பை அளித்துள்ளது.
![]() |
Indian wrestler Vinesh Phogat |
X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "வினேஷின் தியாகத்தையும், உழைப்பையும் யாராலும் மறுக்க முடியாது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்து, அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிட வேண்டும்" என கூறியுள்ளார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதன் பின்னால் சதி இருக்கலாம் என அவரது மாமனார் ராஜ் பால் ரதி சந்தேகம் கிளப்பியுள்ளார்.
"வினேஷ் தனது 100% உழைப்பை கொடுத்த போதிலும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னிருக்கும் உண்மைகளை கண்டறிய, மோடி ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். வெள்ளி பதக்கம் பெறுவது வினேஷின் உரிமை" என்று அவர் கூறியுள்ளார்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் சதி இருப்பதாக குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ வரை எடையை குறைக்க முடியும்.
100 கிராம் அதிகம் என்பதெல்லாம் பொருட்டே இல்லை. பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்துவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும். இந்தியா விளையாட்டில் சிறந்த நாடாக உருவாவதை விரும்பாத சிலர் சதி செய்திருக்கின்றனர்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவாக அமெரிக்க மல்யுத்த வீரர் ஜோர்டன் பரோஸ் ஆதரவு குரல் எழுப்பி இருக்கிறார். மல்யுத்த கூட்டமைப்பின் விதிகளில் திருத்தம் தேவை என கூறியுள்ள அவர், வினேஷுக்கு வெள்ளி பதக்கம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
போட்டியின் 2-வது நாளில் ஒரு கிலோ எடை சலுகை வேண்டும். எடை பார்க்கும் நேரம் காலை 8:30-லிருந்து 10:30-க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
0 கருத்துகள்