தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 42 பேர் உயிரிழப்பு அடைந்துள்ளார்கள். இதனை எடுத்து உடனே கள்ளக்குறிச்சிக்கு பிறந்த அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் இறந்தவர்களை குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.
அதன்படி பூ தலத்திற்குச் சென்ற திமுக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் இறந்தவர்களின் ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்கள்.
முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் அடுத்த உத்தரவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நிறைய அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதில் குறிப்பாக விரைந்து வந்து இறந்தவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் பார்வையிட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தமிழக அரசு 10 லட்சம் வழங்க பிறப்பித்த ஆணையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் விற்றவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்கள் அனைவரும் குற்றம் செய்தவர்களே! அவர்களுக்கு நிதி உதவி வழங்கினால் அது குற்றத்தை ஊக்குவிப்பதற்கு சமமாகும்.
அதனால் அவர்களுக்கு நிதி உதவி வழங்க கூடாது இதை கண்டிப்பாக நடவடிக்கை எடுத்த மீண்டும் இந்த செயல் நடக்காமல் இருக்க தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்" என்று கூறிய தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்துக்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இருந்தபோதிலும் தந்தை அல்லது தாய் என்று பெற்றோரை இழந்தவர்களுக்கு நிதி உதவி அளிப்பது அவர்களுக்கு குழந்தைகளின் வாழ்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சமூக வலைதள ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
0 கருத்துகள்