மீண்டும் மன்மதன் ஸ்டைலில் லோக்கலாக களமிறங்கும் சிம்பு! Tamil Xpress

 தளபதி விஜய்யை வைத்து Greatest Of All Time (GOAT) படத்தை தயாரித்த AGS Entertainment நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனுடன் Dragon என்கிற திரைப்படத்தை எடுத்து வருகிறார்கள். 

சமீபத்தில் Dragon படத்திலிருந்து போஸ்டர்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதே AGS Entertainment நிறுவனம் நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிப்பதற்கான அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது.

STR's Next Movie

அந்த போஸ்டரில் நடிகர் சிம்பு தனது மன்மதன் பட ஸ்டைலில் கையில் கைகுட்டை சுற்றிக்கொண்டு கை நிறைய கயிறு கட்டிக்கொண்டு லோக்கல் ஆக இருக்கும் புகைப்படம் வெளிவந்து சிம்பு ரசிகர்களை  ஆச்சரியத்திற்குள்ளாகியது.

இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து என்கிற இயக்குனர் தான் இயக்க உள்ளார். இவர் தான் AGS Entertainment நிறுவனம் தயாரிக்கும் பிரதீப் ரங்க நாதனின் டிராகன் படத்தின் இயக்குனர். அவரே நடிகர் சிம்புவை வைத்து புதிய படம் இயக்கி அதை Ags நிறுவனம் தயாரிப்பது ஆச்சரியமாக உள்ளது. 

எப்படியும் டிராகன் போல ஒரு நல்ல கதையை இருப்பதினால் தான் AGS நிறுவனம் அவரது அடுத்த கதையும் படமாக ஒத்துக் கொண்டு அதற்கு நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

விரைவில் இந்த படத்துக்கான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது. 

அடுத்தடுத்த அறிவிப்புகளை தெரிந்து கொள்ள நம்ம வலைதளத்துடன் உடனே இணைந்து கொள்ளுங்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்