இன்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தளபதி விஜய் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது யாதெனில்,
தளபதி விஜய் நடித்த ஷாஜகான் படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதி முடித்தேன்.
'மெல்லினமே' 'மின்னலைப் பிடித்து' 'அச்சச்சோ புன்னகை' ஆகிய பாடல்கள் இசை இலக்கியமாய் அமைந்தது கண்டு ஆனந்த ஊஞ்சலில் ஆடினேன்
ஓர் அதிகாலையில் ஒருகால் காருக்குள்ளும் மறுகால் தரையிலும் இருந்த பரபரப்பில் அந்தப் படத்தின் இயக்குனர் ரவி ஓடிவந்தார்
'படத்துக்கு இன்னொரு பாட்டு வேண்டும்' என்றார்.
எல்லாப் பாட்டும் முடிந்து விட்டதே; இனி என்ன பாட்டு' என்றேன்.
'எல்லாப் பாட்டும் நல்ல பாட்டாகவே இருக்கு கவிஞரே; ஒரே ஒரு குத்துப்பாட்டு வேண்டும்' என்றார்
(கூத்துப் பாட்டு என்பதுதான் மொழிச் சோம்பேறிகளால் குத்துப் பாட்டு என்றாகிவிட்டது)
தயங்கினேன்
'விஜய் சொல்லி அனுப்பினார்' என்றார்
கதாநாயகன் சொன்னபிறகு மறுக்க முடியவில்லை; எழுதிக் கொடுத்தேன்.
அரங்கம் சென்று பார்த்தால் இலக்கியப் பாடல்களுக்கு மௌனமாய் இருந்த கொட்டகை கூத்துப் பாடலுக்குக் குலுங்கியது
விஜய் கணக்கு தப்பவில்லை
இசைஇலக்கியம் இன்புறுவதற்கு; கூத்துப் பாட்டு கொண்டாடுவதற்கு
அந்தப் பாட்டு எந்தப் பாட்டு தெரியுமா?
'சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கறுத்த கோழி மிளகுபோட்டு வறுத்து வச்சிருக்கேன்'
என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது X ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஷாஜகான் படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் விஜய் நடித்திருந்தாலும் நீண்ட வருடங்கள் கழித்து இந்த அற்புதமான தகவலை கூறியிருக்கிறீர்கள் என்று விஜய் ரசிகர்கள் வைரமுத்துவை புகழ்ந்து வருகிறார்கள்.
அதேசமயம் இவர் எதுக்கு தேவையில்லாமல் இதை எல்லாம் பேசுகிறார் என்று ஒரு தரப்பினர் திட்டி வருகிறார்கள்.
0 கருத்துகள்