குளிர்காலம் வந்தாலே வறண்ட சருமம், உதடுகள், கால்களில் வெடிப்பு, தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். நமது வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தியே இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண நம்மால் முடியும்.
இந்த பதிவில் குளிர்காலத்தில் வரும் இந்த பிரச்சனையை தவிர்க்க ஐந்து வழிமுறைகளை பற்றி விவாதிக்க உள்ளோம்.
1) தண்ணீர் பருகுங்கள்
பொதுவாக குளிர்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றும் என பலரும் தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால், அவ்வாறு செய்வது தவறானது. ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க நீர் பருக வேண்டியது அவசியமானது.
ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
2) Moisturizer
சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்க Moisturizer-ஐப் பயன்படுத்தலாம். சிறந்த Moisturizer-ஐ தேர்ந்தெடுக்க, அதில் Hyaluronic acid, SPF, Glycerin போன்றவை அடங்கியிருக்கிறதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.
மேலும், கற்றாழை, தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
வெயில் காலத்தில் இது போல பிரச்சினை அதிகமாக இருக்காது.ஆனால் குளிர்காலத்தில் கண்டிப்பாக தோல் குளிரில் வறண்டு போகும்.
எனவே அடிக்கடி தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி தோலில் தடவி வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
3) உதடுகள்
குளிர் காலநிலையில் பலருக்கும் உதடுகளில் வெடிப்பு ஏற்படக்கூடும். எனது உதடுகளில் பராமரிப்பு மிகவும் அவசியம். உதடுகளின் பராமரிப்புக்கு லிப் பாம் பயன்படுத்தலாம்.
கடைகளில் வழவழப்பான எண்ணெய் பிசுபிசுப்பு நிறைந்த கிரீம் அதாவது லிப் பாம் விற்பார்கள். அதை வாங்கி வாயின் உதடுகளில் வெடித்த பகுதிகளில் தேய்த்தால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெடிப்பு மறைந்து உதடுகளில் புண் உருவாகாமல் தடுக்கும்.
நிறைய பேர் லிப் பாம் வாங்கும் போது அது வாசனையாக இருக்க வேண்டும் என்று வாசனை நிறைந்த லிப் பாம் பொருட்களை வாங்கி புதர்களின் பூசுவார்கள்.
அது உடல் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் பல தீங்குகளை விளைவிக்கும். ஏனெனில் அந்த வகையான கிரீம்களில் நிறைய வேதிப்பொருள்களை கலப்பது வழக்கம்.
எனினும், வாசனை மற்றும் நிறங்களைக் கொண்ட லிப் பாம்களை வாங்கக்கூடாது. போன்ற வேதிப்பொருட்கள் இருந்தாலும் அதைத் தவிர்த்துவிடுங்கள்.
4) நல்ல லிப் பாம்
Petroleum, Beeswax, Lanolin, 3-Ceramides போன்றவை அடங்கியுள்ள லிப் பாம்களை வாங்கலாம். உணவு அருந்தும்போது லிப் பாமைத் துடைவிட்டு உணவு உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது.
கற்றாழை, தேன், வெள்ளரிக்காய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களையும் பயன்படுத்தலாம்.
5) கால்களில் வெடிப்பு
வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு கால்களை கொஞ்சம் நேரம் அதற்குள் மூழ்க வைக்க வேண்டும்.
பின்னர் கால்களை நன்கு தேய்த்துக் கழுவி துடைத்த பின்பு விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் வெடிப்பு பிரச்னைகள் சரியாகிவிடும்.
0 கருத்துகள்