கல்யாண ஆல்பத்தை திரைப்படமாக வெளியிட்ட நயன்தாரா!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரண்டு குழந்தை பெற்று எடுத்து தாயாகி இருப்பது அனைவருக்கும் தெரியும்.

திருமணம் ஆன சமயத்தில் அவர் தனது பட வாய்ப்புகளில் அலைச்சலாக இருந்ததால் தனது குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க முடியாத நிலையில் இருந்தார்.

படத்தில் தான் வயிறு பெருத்து காணப்பட வாய்ப்பிருக்கும் காரணத்தினால்  வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்.

Nayanthaya Beyond the fairy tale


அவருக்கு இரண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. அந்த குழந்தைகளுக்கு பெயர் வைத்து அழகாக வளர்த்து வருகிறார்கள். 

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களது குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது.


இந்த நிலையில் பிரபல OTT வலைத்தளமான NETFLIX லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமண வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க போவதாக அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் அந்த திரைப்படத்திற்கு NAYANTHARA Beyond the Fairy Tale என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த வரலாற்று காப்பியத்தை தற்போது Netflix நெட்ப்லிக்ஸ்) அவர்களது பக்கத்தில் (வெளியிட்டுள்ளார்கள். 

இந்த காணொளியானது நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்டது கிடையாது; அதற்கு மாறாக நயன்தாராவின் திருமண வாழ்க்கையும் அவர்களது குழந்தை பெற்ற கதையையும் பற்றியது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். 

தனக்கு (OTT )ஓடிடியில் திரைப்படம் வரவில்லை என்கிற காரணத்தினால்  Netflix (நெட்ப்ளிக்ஸ்) இந்த கோமாளித்தனத்தை செய்திருப்பது அனைவரையும் எரிச்சல் அடைய தான் வைத்திருக்கிறது.

யாராவது இவர்களின் தெய்வீகத் திருமண காவியத்தை காணத்தவறினால் உடனடியாக சென்று பார்க்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்