தமிழ் சினிமாவில் 90களின் படங்களான. சீயான் விக்ரமின் சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/19 ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
வைரமுத்து வரிகள் + ஹாரிஸ் இசையில இந்த படத்தோட எல்லா பாட்டும் செம்ம ஹிட், குறிப்பா "மூங்கில் காடுகளே" பாடல் வரி இயற்கைக்கும் தனிமனிதனுக்கும் இருக்குற காதல அவ்ளோ அழகா சொல்லி இருப்பாரு.. A படத்தோட ஒளிப்பதிவும் ரொம்ப பெருசா பேசப்பட்டது.
அடுத்த படம் "காதல்" இந்த படத்துக்கு முதல்ல "S.முருகன் R.ஐஸ்வர்யா" னு தான் டைட்டில் வைக்குலாம்னு இருந்திருக்காங்க..
ஆனா அந்த டைம்ல வந்த M.குமரன் Son Of மகாலட்சுமி பட டைட்டில்னால இத மாத்த வேண்டியதாயிருக்கு..
இந்த படத்தோட நெகட்டிவ் கிளைமாக்ஸ மாத்த சொல்லி பல தயாரிப்பாளர் கேட்ருக்காங்க.. இவரு பிடிவாதமா இருக்க, கடைசியா சங்கர் தயாரிப்புலதான் இந்த படம் வெளிவந்தது..
இந்த படத்துல ஒரு புது முயற்சியா லைட்டிங்கே இல்லாம ஒளிப்பதிவு பண்ணி இருப்பாரு மில்டன். பிலிம்பேர் 2004ல் சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது..
சங்கர் இவருக்கு ஆரம்பத்துல இருந்தே நெறைய உதவி பண்ணிருக்காரு, அடுத்த படைப்பு " கல்லூரி" இந்த படத்தையும் இவரே தான் தயாரிச்சு வெளிவிட்டாரு.. 2002 தர்மபுரில நடந்த பேருந்து எரிப்பு சம்பவத்த அடிப்படையா வெச்சுதான் இந்த கதையை எழுதிருப்பாங்க..
இந்த படம் எல்லோருடைய கல்லூரி வாழ்க்கையும் ஏதாவது ஒரு புள்ளியில கனெக்ட் பண்ணும்.. காதல், நட்பு, சோகம், பாசம், அரவணைப்புனு எல்லா இடத்தையும் நூல் புடிச்ச மாதிரி அவ்ளோ அருமையா காட்டிருப்பாரு..
ஜோசுவா ஸ்ரீதர் & நாமு காம்பினேஷன்ல இந்த படத்தோட எல்லா பாட்டும் அவ்ளோ அருமை❤️🔥
இதுக்கு அப்புறம் இவர் பண்ண படம் தான் வழக்கு எண் 18/9 இது இவர் கேரியர்லயே பெஸ்ட் சம்பவம்னு சொல்லலாம். நெறைய சென்சிடிவ் போர்ஷன கவர் பண்ண படம்.
இதுல நெறைய புது புது விஷயங்கள கையாண்டிருப்பாங்க, இந்த படத்தையே ஒரு Canon 5D Camera வெச்சு எடுத்து முடிச்சிருப்பாரு விஜய் மில்டன்.
இதுல வர்ற "ஒருகுரல் கேட்குது பெண்ணே" பாடல் எந்தவித music Instrumental- ល់ ឈប់ Singers Vocal வெச்சே Full சாங்கையும் மேக் பண்ணிருப்பாங்க
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த படம் மற்றும் இயக்குனருக்கான தமிழ்நாடு திரைப்பட விருது, பிலிம்பேர் விருது,விஜய் அவார்டுனு நெறைய விருதுகள் குவிச்ச படம்..
கடைசியா இவர் டைரக்ட் பண்ணது "மாடர்ன் லவ் சென்னை-ல இமைகள்" Episode தான். இதுக்கப்புறம் Full Fledged a ஆக்டிங்ல இறங்கிட்டாரு..
அசுரன் படத்துல வெற்றிமாறன் நீங்க ஒரு ரோல்ல நடிங்கனு கட்டாயப்படுத்த அதுக்கப்புறம் அந்த பாதை அவர எங்கயோ போய்விட்டது.
உதாரணமாக குட் நைட் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் உடன் இவன் நடித்த காட்சிகள் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டன.
தற்போது பல திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருகிறார்.
0 கருத்துகள்